Leader FM

The Leader FM was started for worldwide of the Tamil music lovers.

Adbox
Adbox

Wednesday, October 28, 2020

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகிறார்.

டெர்மினேட்டர் நாயகன் அறுவை சிகிச்சை மூலம், இதயத்தில் ஒரு புதிய பெருநாடி வால்வு பொறுத்தப்பட்ட பின்னர் "அருமையாக" இருப்பதாக உணர்கிறேன் என்று ரசிகர்களிடம் கூறினார்.

73 வயதான அவருக்கு 1997 இல் ஏற்பட்ட இதயம் சம்பந்தமான பிரச்னை காரணமாக 2018 இல் இதயத்தில் வால்வு பொருத்தப்பட்டது. அதனை மீண்டும் தற்போது புதிய வால்வு புதுப்பித்துக்கொண்டார்.

அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக்கின் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து அருகில் உள்ள பூங்காக்களுக்கு சென்று காட்சிகளை பார்த்து ரசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் மகன் பேட்ரிக், இன்ஸ்டாகிராம் பதிவில் நகைச்சுவையாக “இன்று வேலை செய்ய வேண்டாம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox