
ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜெ சரவணன் இணைந்து இயக்கி, நயன்தரா - ஆர் ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த இடத்தின் பாடல் காட்சிகள் யூடியூபில் வெளிவந்து பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் மே 2020 அன்றே வருமென அறிவிக்கப்பட்ட நிலையில் கொவிட் -19 சூழ்நிலையால் 23 அக்டோபர் 2020 அன்று வெளியிட படுமென அறிவிக்க பட்டது. இருப்பினும், திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்காததால் மீண்டும் தேதி தள்ளி போனதும். வருகிற தீபாவளி நவம்பர் 14, 2020 அன்று டிஜிட்டலிலும், அனுமதியளிக்கப்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகுமென நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா இப்போதெல்லாம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தன் திறமையினை வெளிகொண்டு வந்துள்ளார். அந்த வகையில் இந்த படம் ரசிகர்களுக்கு சந்தோஷமான தீபாவளி விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து ஆர் ஜே பாலாஜி கூறுகையில், இது ஒரு கலகலப்பான திரைப்படம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர்.
இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களான தினேஷ் கிருஷ்ணன் - ஒளிப்பதிவில், ஜி. கிரிஷ் - இசையில், ஆர். கே. செல்வா - படத்தொகுப்பில் மற்றும் பிரமாண்டமான கிராபிக்ஸ் கட்சிகளுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படம் ரசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
No comments:
Post a Comment